Posts

Showing posts from May, 2016

உங்கள் செல்போன் ஒரிஜினல்தானா என்பதனை கண்டுபிடிப்பது எப்படி? ..

நீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாயமாகும். சில ஆயிரம் ரூபாய் முதல் பல ஆயிரம் ரூபாய்வரை கொடுத்து ஒரு புதிய மாடல் செல்போனை வாங்கும்போது, அதனுடைய உண்மைத்தன்மையை அறிய வேண்டும் அல்லா? உண்மையான நிறுவனத் தயாரிப்பாக இருக்க வேண்டும் இல்லையா? உண்மையான நிறுவனத்தைப் போன்றே தற்போது போலியான தயாரிப்புகள் தற்போது விலைக்கு வந்து அசல் எது? போலி எது என்று கண்டுபிடிக்க முடியாதவாறு எந்த வித்தியாசமும் இல்லாமல் காணப்படும். இவ்வாறான போலி தயாரிப்பு மொபைல்களைக் கண்டறிய கீழ்க்கண்ட வழிமுறைகள் உங்களுக்கு உதவும். முதலில் நீங்கள் உங்கள் மொபைல் போன் ஒரிஜினல்தானா என்பதைக் கண்டறிய International Mobile Equipment Identification எனப்படும் IMEI எண்ணை அறிந்துகொள்ள வேண்டும். உங்கள் மொபைலில் IMEI எண்ணைக் கண்டுபிடிப்பது எப்படி? சாதாரண செயல்பாட்டின் மூலம் IMEI எண்ணைக் கண்டறிய முடியும். உங்கள் மொபைலில் *#06# என தட்டச்சிடுங்கள்…உடனே உங்கள் மொபைல் போனிற்கான IMEI எண் காட்டபடும். அந்த IMEI எண்ணை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். ...

தண்ணிரில் விழுந்த மொபைலை சரிசெய்வதற்கான எளிய வழி ..

மழை காலங்களில் நமது மொபைல் தண்ணிரில் விழுந்து விடும் அல்லது நாம் தவறி தண்ணிரில் மொபைலை போட்டுவிட்டால் இனி கவலை வேண்டாம். அதை சரி செய்ய இதோ ஓர் எளிய வழி ஒன்று இருக்கிறது. பெரும்பாலும் இதை யாரும் அறிய வாய்ப்பில்லை இதோ அதை நீங்களே பாருங்கள். தண்ணிரில் விழுந்த மொபைலை ஆன் செய்யாமல் பேட்டரியை கழற்றி, நம் வீட்டில் இருக்கும் உலர்ந்த அரிசியின் மீது வையுங்கள். பின்பு அதன்மேல் முழுமையாக அரிசியை கொட்டவும். தற்பொழுது அதை எடுத்து சிறிது நேரம் வெயிலில் வைக்கவும். 1 மணி நேரம் கழித்து மொபைலை எடுத்து பேட்டரி போட்டு ஆன் செய்யவும் இப்போது நிச்சயம் உங்கள் மொபைல் வேலை செய்யும்.